முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை 190 ஓட்டங்கள் முன்னிலையில்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 364 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் Steven Smith ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களையும் Marnus Labuschagne 104 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக பிரபாத் ஜயசூரிய 118 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 554 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.

அதனடிப்படையில் ஆட்டமிழக்காமல் விளையாடிய அவர், 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

அத்துடன் அணித்தலைவர் திமித் கருணாரத்ன 86 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 85 ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 61 ஓட்டங்களையும் மற்றும் எஞ்சலோ மெத்தியூஸ் 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பந்துவீச்சில் Mitchell Starc 4 விக்கெட்களையும் Mitchell Swepson 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 190 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

Previous articleஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய STF அதிகாரிகள் பணிநீக்கம்!
Next articleதனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த தினேஷ் சந்திமால்