புதிய ஜனாதிபதி தெரிவு ? வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் (13) ஆம் திகதி பதவி விலகினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) நாடாளுமன்றத்தை கூட்டவும் எதிர்வரும் 20 ஆம் திகதி அடுத்த ஜனாதிபதிக்கான ரகசிய வாக்கு நடைபெறுவதாகவும் கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானித்ததாகவும் பிரதி சபா நாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சபா நாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற நாடாளுமன்றத்தில் விசேட கட்சி தலைவர்களுக்கான கூட்டம் இடம் பெற்றுள்ளது. இக் கூட்டத்தில் பிரதமர் ரணில் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதிக்கான வாக்குகள் எதிர்வரும் 19 ஆம் திகதி பரிசீலனை செய்யப்படும்.

பேருந்து நிக்கவில்லை என பேருந்தின் மீது கல்லை விட்டு எரிந்த யுவதி!

ஜனாதிபதி தனது பதவி விலகலை சபாநாயகருக்கு தொலைபேசி ஊடக தெரிவிக்காது உத்தியோக பூர்வமாக அறிவிக்க வேண்டும் என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர். அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கீம் ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக பிரதமர் ரணில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் முன்வைத்த எரிபொருள் கொள்வனவுக்கான யோசனைக்கு மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ .சுமந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சபாநாயகர் கூட்டத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, ஏத்தி கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, குமார வெல்கம, டிலான் பெரேரா,திரான் அலஸ், டலஸ் அழகப்பெரும, மனோகணேஷன், லக்ஷமன் கிரியெல்ல, ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், உதய கம்மன்பில ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.