பிரதமர் செயலகத்தில் இடம்பெற்ற ஆரப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை தாக்குதலில் இளைஞர் ஒருவர் பலி!

பிரதமர் செயல்கத்தின் முன்னால் இடம்பெற்ற ஆர்பப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் கண்ணீர்புகை தாக்குதலால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது இன்றைய தினம் கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரழ்ந்த நபர் குருநாகல், தலதாகம பிரதேசத்தை சேர்ந்த ஜாலிய திசாநாயக்க (26 வயது) என்ற ஒரு குழந்தையின் தந்தையொருவர் என தெரியவந்துள்ளது.

Previous articleஇன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட எரிபொருள் விநியோகம்!
Next articleநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் : வெளியான விஷேட வர்த்தமாணி!