ஆர்ப்பாட்டத்தில் இந்திய பெண் ஊடகவியலாளருக்கு நேர்ந்த கதி!

இலங்கையில் பதற்றத்தின் போதும் என்னை ஆர்ப்பாட்டக்காரர்கள் காப்பாற்றினார்கள் என இந்தியாவின் ND தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில்

“ஜுலை 13ஆம் திகதி இலங்கைக்கு மிகப்பெரிய நாள். இனப்படுகொலையாளி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்திற்கு வெளியே நிலைமை மோசமடைந்தது, அங்கு ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி எவ்வாறு தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டார் என கூறி கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

நான் செய்திகளை சேகரிக்கும் போது தொடர்ந்து கண்ணீர்புகை பிரயோகத்திற்குள்ளானேன். ஆனாலும் தொடர்ந்து பணிகளை தொடர்ந்தேன். இதன்போது என்னால் கண்களை திறக்க முடியாமல் போனது.

மக்கள் மிகவும் ஆவேசத்துடன் கோட்டா கோ, ரணில் கோ என கூச்சலிட்டு வந்தனர். என்னால் மூச்சுவிட முடியாமல் போனது.

கண்ணீர் வடிய தொடங்கியது. இதனை அவதானித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் என்னை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். நீர் வழங்கி கண்களை கழுவ உதவினார்கள். கோபம், விரக்தி வெறுப்பின் உச்சத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்த போதிலும் எனக்கான உதவிகளை செய்தார்கள்.

நான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினேன். எனினும் ஒன்றும் நடக்காது எங்களுக்கு கண்ணீர் புகை பழகிவிட்டது. பயப்பட வேண்டாம் என சமாதானப்படுத்தினார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.