மாமனாரின் அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்த மறுமகள் : துடி துடித்து இறந்த மாமனார்!

குடும்பத்தகறாறின் காரணமாக மாமனாரின் அந்தரங்க உறுப்பில் மறுமகள் எட்டி உதைத்ததால் துடி துடித்து மாமனார் இறந்து புானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியையுடைய பதியா கட்டாரா எனப்படுபவர் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் வாழும் குடும்பத்தினருக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இடையில் நிலத்தகராறு வந்ததையடுத்து வாக்குவதம் வந்துள்ளது.

இதனால் அந்நபரின் மருமகளான சந்தோஷூக்கும் அவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மருமகள் மாமனாரை தாக்க பலமுறை முற்பட்டுள்ளார் இதனையடுத்து கடும் கோபத்துக்கள்ளான மறுமகள் மாமனா ஓங்கி அவரது அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்ததில் மாமனார் வலி தாங்க முடியாமல் நிலத்தில் சரிந்தார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் மாமனாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இரண்டு நாட்கள் சிகிச்சைபெற்று வந்த நிலையில் மாமனார் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மறுமகளை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleவெளியானது இன்றைய மின்வெட்டிற்கான கால அட்டவனை!
Next articleயாழில் வீடொன்றில் பெட்ரோல் திருடிய மர்ம நபர்கள்!