மாணவியின் மரணத்தில் தொடரும் மர்மங்கள் : பாடசாலையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

பாடசாலையில் கல்வி பயின்று வரும் 12ம் வகுப்பு மாணவி பாடசாலையின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் மாணவியின் உடம்பில் காயங்கள் மற்றும் கீரல்கள் ரத்தக்கரைகள் இருந்தததையடுத்து கொந்தளித்த பொதுமக்கள் பள்ளியின் பேருந்துகள் மற்றும் வளாகங்களை அடித்து தீ வைத்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மாணவி கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி என தெரியவந்துள்ளது.

குறித்த மாணவி கடந்த 13ம் திகதி உயிரிழந்துள்ள நிலையில் விசாரணையின்போது மாணவி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பிரேத பரிசோதனையின் முடிவுகளில் மாணவியின் உடையில் காயங்கள் இருந்ததாகவும் கீரல்கள் உடலில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் பெற்றோர் இது தற்கொலை அல்ல கொலை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆர்ப்பாட்டம் பின் வன்முறையாக மாறி அங்கு உள்ள பேருந்துகள் எரிக்கப்பட்டது.

இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் தாயார் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் இரு ஆசிரியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் , பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தமிழகத்தில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.