முச்சக்கரவண்டி கட்டணமும் குறைப்பு : இலங்கை மக்களுக்கு மற்றுமொறு மகிழ்ச்சி செய்தி!

நாட்டில் குறைக்கப்பட்ட டீசலின் விலையை அடுத்து பேருந்து கட்டணம் 04 வீதத்தின் அடிப்படையில் குறைந்துள்ளது. அதனடிப்படையில் முச்சக்கரவண்டியின் கட்டணமும் விலை குறைத்துள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இரண்டாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் கட்டணம், 100 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

அதேசமயம் , முதலாவது கிலோமீற்றருக்காக தற்போது அறவிடப்படும், 100 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

Previous articleபேருந்துக்கட்டணம் விலை குறைப்பு : மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
Next articleயாழில் வீட்டாரை கத்திமுணையில் மிரட்டி திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட குழு கைது!