சற்று முன்னர் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகிய சஜித்!

சற்றுமுன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் விலகியதாக சற்று முன்னர் தகவல் வெளியாகியுள்ளது.

வேட்புமனு தாக்கல் இன்று நடைபெறவிருந்த நிலையில் சஜித் பிரேமதாஸ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், மக்களின் நலனுக்காகவும் நான் ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை இதன் மூலம் திரும்பப் பெறுகிறேன். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டலஸ் அலகபெருமவை வெற்றி பெற கடுமையாக உழைப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியாக தெரிவானால், பிரதமர் பதவி சஜித்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஎரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த உப அதிபர் பலி!
Next articleயாழில் ஆவா குழு தலைவரை வாளால் வெட்டிய மர்ம குழு!