யாழில் போதைப்பொருள் ஊசி பாவித்த 20 வயது இளைஞர் மரணம்!

யாழில் போதைப்பொருள் ஊசி பாவித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது

குறித்த இளைஞர் நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் ஊசி பாவித்த பின் சில நிமிடங்களில் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இளைஞனின் சடலம் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து போதைப்பொருள் நேர்மறை அறிக்கை கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளையதினம் உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleநாட்டின் 08வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்பட்டார்!
Next articleயாழினை பற்றி அவதூராக பேசிய இலங்கை நடிகை பூர்விகா!