வவுனியாவில் காணாமல் போன சிறுவன் : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

வவுனியாவில் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றையதினம் வவுனியா, தேக்கவத்தை, ஆலடி சந்தியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காணாமல் போன சிறுவன் குறித்த பகுதியைச்சேர்ந்த 15 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது.

சிறுவன் நேற்று காலை வீட்டை விட்டு சென்ற நிலையில் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமுற்ற பெற்றோர் பொலிஸ்நிலையத்தில் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தந்தையான ஜசோதரனின் 077 559 9709 தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Previous articleநீராடச்னெ்ற 17 வயது மாணவர்கள் நீரிழ் மூழ்கி பலி!
Next articleஅடுத்த பிரதமருக்கு நால்வரின் பெயர்கள் பரிந்துரை!