ஜனாதிபதியாக பதவியேற்கும் போது நாடாளுமன்ற வளாகத்தில் மின்தடை! : விசாரணையில் பொலிஸார்!

ரணில் விக்ரம சிங்க ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்யும் விழாவில் மின்தடை ஏற்பட்டதால் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அவர் பதவிப்பிரமாணம் செய்வதை சில சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாக திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்யும்போது மின்தடை ஏற்பட்ட சுமார் 10 நிமிடங்கள் மின் தடைப்பட்டு காணப்பட்டது.

இதனால் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்ப முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் வழமையாக நாடாளுமன்றத்தில் மின்தடையின் போது அடுத்த சில விநாடிகளில் ஜெனரேட்டர்கள் இயங்கிவிடும் ஆனால் இன்று 10 நிமிடங்கள் கழித்து இயங்கியது குறிப்பிடத்தக்கது.

Previous articleபுதிய ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார் சமன் ஏக்கநாயக்க!
Next articleஉடனடியாக எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் : செய்வதறியாது திணறும் கோட்டாபய!