யாழில் லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் !

யாழில் லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாறி இடம் மாற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றன.

இச்சம்பவமானது நேற்றையதினம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இவர் மீது தொடர்ந்து வந்த குற்றச்சாட்டுகளால் பதவி குறைக்கப்பட்டு வேறு இடம் மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் அவர்ஒரு சிலரை வைத்து கொண்டு கையூட்டுப் பெறல், சட்டவிரோத மணல் கல் வியாபாரிகளிடமிருந்து கையூட்டு பெற்று வந்தமை , முறைப்பாடுகளை தட்டிக்கழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பட்டு வந்த நிலையில் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய பொறுப்பதிகாரியாக காங்கேசன்துறை பொலீஸ் பிராந்தியத்தில் இருந்து ஒருவர் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleராஜபக்சக்களின் உகண்டா தொழிற்சாலையில் அடிமைகளாய் இருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ? : விடுக்கப்பட்ட கோரிக்கை!
Next articleகொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதியில் ஏற்பட்ட விபரீதம் : ஒருவர் பலி!