முகநூலில் அவமதித்த இருவரை தனியாக கூட்டிச்சென்று சிலுவையில் அறைந்த மாந்திரீகவாதி!

முகப்புத்தகத்தில் தன்னை அவமதித்தாக கூறி இருவரை வரவழைத்து இளைஞன் ஒருவர் அவர்களை சிலுவையில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.

இச்சம்பவமானது கண்டி – பலகொல்ல பகுதியில், கடந்த மாதம் 25 ம் திகதி இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட இருவர்கள் பொல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரும் , கடுவெல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபரை இருவர் முகப்புத்தகத்தில் அவமதித்தாக கூறப்பட்டு இருவரை காட்டுப்பகுதிக்கு கூட்டிச்சென்று மரப்பலகையால் ஆன சிலுவையில் சந்தேக நபர் அறைந்துள்ளார்.

இவர் பல்வேறு மாந்திரீக செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இச்செயலை செய்தது 30 வயதுடைய துஷ்மந்த என்ற மாந்திரீக வாதி என தெரியவந்துள்ளது.

மேலும் இவரை பொலிஸார் சுற்றிவழைக்கையில் தப்பியோடியமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதியில் ஏற்பட்ட விபரீதம் : ஒருவர் பலி!
Next articleஎரிபொருள் விநியோகம் தொடர்பில் பொதுமக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!