தற்கொலை செய்து கொண்ட 19 வயது பாடசாலை மாணவி : தீவிர விசாரணையில் பொலிஸார்!

பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றையதினம் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மாணவி 19 வயதான முத்துரட்ணம் ஜிலோனி என்பவர் என தெரியவந்துள்ளது.

இவர் தலவாக்கலை பெயாவல் தோட்டத்தைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மாணவி லிந்துலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயின்று வரும் இரண்டாம் வருட மாணவியென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாணவியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா பொதுமருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதுடன் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleயாழில் எரிபொருள் அட்டை பெற வரிசையில் காத்திருந்த குடும்பஸ்தர் பலி!
Next articleQR Code இற்கு அமைய எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் இடங்கள் குறித்து வெளியான அறிவிப்பு!