இருப்பதற்கு நாடு இன்றி தவிக்கும் கோட்டாபய : வெளியான தகவல்!

இலங்கையை கடன் வலையில் சிக்க வைத்து விட்டு பொருளாதார சிக்கலினால் பொதுமக்களை அவதியுற செய்து விட்டு இலங்கை வரலாறே கண்டிறாத ஜனபதிபதியாக இருந்து பல ஏழை மக்களின் சாபங்களுக்கு இலக்காண முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தங்குவதற்கு நாடு இன்றி தவிர்த்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர் பல்வேறு அலுத்தங்களை அடுத்து சுரங்கப்பாதையின் வழியாக நாட்டை விட்டு தப்பிச்சென்ற கோட்டாபயவிற்கே இந்த நிலமை.

முதன் முதலில் நட்பு நாடான மாலைத்தீவுக்கு சென்றுவிட்டு அங்குள்ள இலங்கை மக்கள் அனைவரும் கோட்டாபயவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார்.

சிங்கப்பூரில் விசா காலம் முடிவு பெற்ற நிலையில் அங்கிருந்து செல்லுமாறு அதிகாரிகள் அவருக்கு தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் எந்த காரணத்திற்காகவும் நான் இலங்கை வரமாட்டேன் என அவர் உறுதியாய் கூறியுள்ளார்.

மேலும் கோட்டாபய சிங்கப்பூரில் இருந்து அவரின் நட்பு நாடான சவூதி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவீதியில் செல்லும் பெண்களிடையே அநாகரீகமாக நடந்து கொள்ளும் ராணுவத்தினர்!
Next articleபோதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!