யாழில் எரிபொருள் நிலையத்தில் இளைஞனின் சட்டையை பிடித்து அடித்த பொலிஸார்!

யாழில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கருத்து வேறுபாட்டில் இளைஞரின் சட்டையை பிடித்து பொலிஸார் அடித்ததில் அப்பகுதியில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.

இச்சம்பவமானது நேற்றையதினம் நல்லூர் பிரதேச செயலாளருக்கு உட்பட்ட கல்வியங்காட்டில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பங்கீட்டு அட்டை இல்லாமல் தமக்கான எரிபொருளை வழங்குமாறு கூறியவர்களிற்கும் பொலிஸாருக்கும் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

பங்கீட்டு அட்டை எங்கே என கேட்டபோது அதற்கு அவர்கள் அதைபெறுவதற்காக கிராம சேவகரிடத்து சென்றபோது கிராம சேவகர் வருகின்ற செவ்வாய் கிழமை கிடைக்கும் என கூறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் பங்கீட்டு அட்டை இல்லாத நபர்களுக்கு எரிபொருள் வழங்கமாட்டோம் என பொலிஸாரும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒரு இளைஞரை பொலிஸார் சட்டையை பிடித்து அறைந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவஇடத்திற்கு வந்த கிராம சேவகர் நிலமையை சுமூகமாக கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.