யாழில் முடங்கிய தனியார் பேருந்து சேவைகள்!

எரிபொருள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர் சேவைகள் இன்றைய தினம்(25) சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் தனியார் பேருந்து சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது யாழ். மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இன்றையதினம் சேவையில் ஈடுபட எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடையும். தூர பேருந்து சேவையும் இடம்பெறாது. பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை சாலைகளில் தனியார் பேருந்துகள் எரிபொருள் பெறும்போது பாரிய பிரச்சினைகள் ஏற்படுகிறது.தனியார் பேருந்துகளுக்கு நேற்றும் எரிபொருள் வழங்கப்படவில்லை. நாளையதினம் சேவையில் ஈடுபட எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடையும். தூர பேருந்து சேவையும் இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றையதினம் வடமாகாணத்திற்குட்பட்ட தூர பேருந்துகளும் சேவையில் ஈடுபடாதென யாழ்ப்பாண மாவட்ட தனியார் தூர பேருந்து சங்க தலைவர் விநாயகமூர்த்தி சஜிந்தன் தெரிவித்துள்ளார்.

Previous articleஉங்களை விட புலிகள் சிறந்தவர்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள் : இராணுவத்தினரிடம் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள்!
Next articleயாழில் தனியாக வாழும் பெண்ணின் வீட்டில் நுழைந்த திருடன் : மடக்கி பிடித்த ஊர்மக்கள்!