மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை திருடியதால் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியான நபர்!

தனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை திருடிய குற்றத்திற்காக சந்தேக நபரை உரிமையாளர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது இன்றையதினம் கொழும்பு -08 பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காசல் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்படிருந்த மோட்டார் சைக்களில் இருந்து பெட்ரோல் திருடிய விவகாரத்தில் இருவருக்கிடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிவையில் உரிமையாளர் மறைத்து வத்திருந்த கத்தியை எடுத்து சந்தேக நரை குத்தியுள்ளார்.

தகவல் அறிந்து வந்த பொலிஸார் உரிமையாளரை கைது செய்ததையடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் தனியாக வாழும் பெண்ணின் வீட்டில் நுழைந்த திருடன் : மடக்கி பிடித்த ஊர்மக்கள்!
Next articleகாணமல்போன தனது 15 வயது மகளை கண்டுபிடித்து தருமாறு உயர் மின்கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை!