எரிபொருள் நிலையத்தில் அப்பாவி குடும்பஸ்த்தரின் மீது கொடூர தாக்குதல் நடத்திய பொலிஸார் : வெளியான காரணம்!

எரிபொருள் நிலையத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் பொலிஸாரிடம் எரிபொருள் கேட்டமையால் பொலிஸார் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக அந்நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இச்சம்பவானது நேற்றையதினம் பாணந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பலத்த காயத்துக்குள்ளானவர் சம்பவத்தில் வவுலுகல மக்கொன பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சமந்த ராஜபக்ச என்ற நபர் என தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

நான் வாடகைக்கு கார் ஓட்டி வருகின்றேன் பெட்ரோலுக்காக 20ம் திகதி முழுவது லைனில் காத்திருந்தேன் இருந்தும் எனக்கு பெட்ரால் கிடைக்கவில்லை.

கடந்த 24ம் திகதியன்று வாகங்கள் மற்றும் பொலிஸாரின் ஜீப்கள் நிறுத்தப்பட்டு பொட்ரோல் அடித்துக்கொண்டிருந்தனர்.

இதன்போது தனக்கும் இரண்டு லீட்டர் பெட்ரோல் தருமாறு கேட்டேன் அதற்கு பொலிஸார் பெட்ரோல் செட்டில் வைத்து சரமாறியாக தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று வாயில் கம்பு கடிக்கவைத்து சரமாறியாக தாக்கியுள்ளதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த தாக்குதலின் போது குறித்த நபரின் கணுக்கால், பிட்டம், கால், தோள்பட்டை, விதைப்பை, உதடு மற்றும் காதுக்கு அருகில் என சுமார் 15 இடங்களில் காயங்கள், கீறல்கள் மற்றும் வீக்கங்கள் இருப்பதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாணந்துறை மனித உரிமைகள் அலுவலகத்திலும் சமந்த ராஜபக்ஷ முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும் பாணந்துறை வைத்தியசாலை பொலிஸார் அவரது வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.