யாழில் போதை ஊசி ஏற்றி இரண்டாவது இளைஞர் ஒருவர் பலி!

யாழில் போதைப்பொருள் ஊசி ஏற்றி இரண்டாவது இளைஞன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றிரவு யாழ் திருநெல்வேலி – பாரதிபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் குறித்த பகுதியைச்சேர்ந்தவர் என விசாரணையிள் மூலம் தெரியவந்துள்ளது.

இளைஞர் குடிக்கு அடிமையாகியிருந்த நிலையில் அவரது இதயத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தததுடன் அம்மருத்துவர்கள் அவரை போதைப்பொருட்கள் இனி பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

அதனை பொருட்படுத்தாமல் இளைஞர் நேற்றுமுன்தினம் ஊசி மூலம் போதைமெருந்து செலுத்தியுள்ள நிலையில் நேற்றையதினம் மருத்துவமைனையில் அனுமதித்ததையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர்.

இது குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில் போதைப்பொருளின் காரணமாக இதயத்தில் ஏற்பட்ட கிருமித்தொற்றே காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

மேலும் யாழில் போதைப்பொருளின் பாவனையால் அன்மை காலமாக உயிரழந்த இளைஞர்களின் எண்ணிக்கை 10ற்கும் மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்கள்!
Next articleமின்சாரம் தடைப்பட்டால் மெழுகுவர்த்தியில் இயங்கும் வைத்தியசாலை!