மின்சாரம் தடைப்பட்டால் மெழுகுவர்த்தியில் இயங்கும் வைத்தியசாலை!

மின்சாரம் தடைப்பட்டால் மெழுகுவர்த்தி மற்றும் தொலைப்பேசி லைட்களில் இயங்குவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையானது மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மருத்துவமனையில் இருக்கும் அவசர நோயாளர்கள் சுவாச நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களை பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஏற்ப்பாடு செய்து வருகின்றனர்.

மேலும் வைத்தியசாலையில் உள்ள மருந்துபொருட்கள் குறிப்பிட்ட அளவு வெப்பத்தில் வைக்க வேண்டிய நிலையில் உள்ளதால் அதிகளவான மருந்து பொருட்கள் கெட்டுபோவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் உள்ள ஜெனரேட்டர்களுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு சுமார் 25 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நாட்களில் மின்வெட்டானது மூன்று மணித்தியாளங்கள் தொடர்ந்து நிப்பாட்டப்படுவதால் சுமார் 75 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாகவும், எரிபொருள் கிடைக்காததால் மின்வெட்டு சமயங்களில் மருத்துவமனை இருளில் மூழ்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மின்சாரம் தடைபட்டால் உயிர்காக்கும் கருவிகள் வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும் அவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.