யாழில் பாட்டியை சீரழிக்க முயன்ற 15 வயது சிறுவனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழில் 65 வயது பாட்டியை காட்டிற்குள் கடத்தி சீரழிக்க முயன்ற 15 வயது சிறுவனை பிணையில் செல்லுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வயோதிபப்பெண்ணை நேற்று முன்தினம் (25) பொன்னாலை – மூளாய் பகுதியில் வயோதிபப்பெண் மீன் பிடித்து விட்டு வரும் வேளையில் சிறுவன் வழிமறித்துள்ளான்.

இதன்போது அச்சிறுவன் அவ் வயோதிப பெண்ணை வீட்டில் விடுகிறேன் என கூறி சைக்கிளில் ஏற்றியுள்ளார்.

இதனையடுத்து சிறுவன் வீட்டுக்கு கூடடிச்செல்லாமல் அடர்ந்த காட்டுக்குள் கூட்டிச் சென்று வண்புநர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளான்.

இதனபோது அவ் வயோதிப பெண் இந்த இடத்தில் தான் எனது பேரன் விரகு வெட்ட வந்துள்ளான் என கூறி அவர் பேரை சொல்லி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இதனால் பயந்த சிறுவன் அங்கிருந்து ஓடியதையடுத்து அப்பெண் பொலிஸாரிடம் அளித்த முறைப்பாட்டிற்கமைய சிறுவனை கைது செய்து பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்னறம் அச்சிறுவனை பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது. மேலும் குறித்த சிறுவனின் தாயார் சவூதியில் பணியில் இருப்பதாகவும் அவனின் அப்பா வீட்டிள் உள்ளபோதே அவன் போதைப்பொருள் பாவிப்பதும் தெரியவந்துள்ளது.