ஆடி அம்மாவாசை விரதத்தை வீதியில் முடித்த குடும்பஸ்த்தர்!

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசையான இன்றைய தினம் வியாழக்கிழமை தந்தைக்காக விரதம் இருந்து , காலமான தந்தைக்கு மதியம் படையல் செய்து , அந்த உணவை சாப்பிட்டு தமது விரதத்தை முடித்துக்கொள்வார்கள்.

இந்நிலையில் இன்றைய தினம் எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த ஒருவர் தமது விரதத்தை வீதியில் முடித்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Previous articleஎரிபொருள் நிரப்பு ஊழியரை மிரட்டுவதற்கு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபர்!
Next articleமட்டக்களப்பில் விமாணப்படை வீரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து : அந்நியன் பட பாணியில் போர்ட் எழுதி வைத்த மர்ம குழு!