யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சகோதரர்கள் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!

யாழில் போதைப்பொருள் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டிலி இளம் சகோதரர்கள அதிரடிப்படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ்.கொடிகாமம் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யபப்பட்ட சகோதரர்களாக இருவரிடம் இருந்து 210 மில்லிக்கிராம் நிறை கொண்ட மூன்று சிறிய ஹெரோயின் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் கொடிகாமம் கச்சாய் வீதிப் பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 24 வயதுடைய சகோதரர்களே என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleயாழில் இப்படியும் ஒரு சம்பவம் நிகழ்ந்து வருகின்றது : பெரும் அவதிக்குள்ளான நடுநிலை குடும்பத்தினர்!
Next articleயாழ் கடல் நீர் ஏரியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய பெருமளவான மீன்கள் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!