முல்லைத்தீவில் தனது சித்தியின் தொல்லை தாங்காமல் தாயை தேடி 200KM தூரம் சைக்களில் பயனித்த சிறுவன்!

முல்லைத்தீவு பகுதியில் தனது சித்தியின் தொல்லை தாங்க முடியாமல் நெடுங்கேணியில் இருந்து வாழைச்சேனை வரை 200 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்திற்கு சைக்கிளில் பயணித்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சைக்கிளில் பயணித்த அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுவனை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்தள்ளனல்.

குறித்த சிறுவன் கெபத்திகொல்லாவ பிரதான வீதியின் புளியங்குளம் காட்டுப் பகுதியில் சிறுவன் ஒருவர் சைக்கிளில் பார்த்த ஊர்மக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாருககு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவனை பாதுகாப்பாக தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

மேலுமு் சிறுவனுக்கு உணவு, தண்ணீர், பாணங்கள் வழங்கியுள்ளனர் நடத்திய விசாரணையில், நெடுங்கேணி பிரதேசத்தில் வசிக்கும் சித்தியின் அன்றாட துன்புறுத்தல் மற்றும் தொல்லை தாங்க முடியாமல் வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சைக்கிளில் பயணிக்க தீர்மானித்துள்ளதாக சிறுவன் குறிப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleமனைவியை ஏழு மணிநேரம் மரத்தில் கட்டி வைத்து அடித்த கணவன் கைது!
Next articleசந்தேக நபர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 51 வயது முதியவர் பலி!