வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டில் குடும்பஸ்த்தர் பலி!

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் நேற்று மாலை ஆயுதம் தாங்கி குழுவொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதன்போது அவரின் ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் உடற்கூறு பரிசோதனைக்காக வவுனயா வைத்தியசாலையில் சடலத்தை அனுப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Previous articleபாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட கல்வி அமைச்சு!
Next articleயாழில் இன்று பெட்ரோல் விநியோகம் செய்யும் இடங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!