வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸை கடத்த முயன்ற நபர்கள் : பின்னர் நடந்த சம்பவம்!

வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் பொலிஸை ஒரு குழு காரில் வைத்து கடத்தி செல்லப்பட்ட நிலையில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பெண் பொலிஸாரை மீட்டுள்ளனர்.

இச்சம்பவமானது இன்றையதினம் அம்பான்பொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் பொலிஸாரை ஒரு நபரும் இரண்டு பெண்களும்
கடத்த முயற்சித்துள்ளனர்.

இவர்ளில் கடத்தலில் ஈடுபட்ட ஆணிற்கு 35 வயதும் பெண்களில் ஒருவருக்கு 22 வயதும் மற்றொரு பெண்ணிற்கு 45 வயதும் இருக்குமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பெண் பொலிஸ் அதிகாரியை காரில் கடத்தி சுமார் 07 கிலோமீட்டர் பயணித்ததையடுத்து பொலிஸார் பின்தொடர்ந்து காரின் சக்கரத்தில் சுட்டு மீட்டனர்.

இதனையடுத்த கைது செய்யப்பட்ட மூவரை மஹாவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleயாழ். எரிபொருள் நிலையத்தில் பெண்களுக்கு தனி வரிசை அமுல்படுத்திய அரச அதிபர்!
Next articleயாழில் பிரபல பாடசாலை ஆசிரியை மாணவர்களுடன் தவறான பழக்கம் : அம்பலப்படுத்திய பாடசாலை மாணவி!