நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!

கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்த திருவிழாவில் அதிக சன நெரிசல் இருப்பதால் அதிகம் திரட்டுச் சம்பவம் இடம்பெருமென யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிபுரையின் கீழ் பொலிஸ் அணிகள் சிவில் மற்றும் சீருடையில் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து முருகனை தரிசிக்க வரும் பொதுமக்கள் நகைகளை அணிந்து வருவதை தவிர்ப்பதோடு அதிகளவில் பணத்தினை ஆலயத்திற்கு எடுத்து வருவதையும் தவிர்க்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலுமு் ஆலயத்திற்கு வரும் பொதுமக்கள் தமது வீடுகளை சரியாக பூட்டி உறுதிப்படுத்தி தங்களை இயலுமானவரை பாதுகாத்து வருமாறு தெரிவித்துள்ளனர்.

Previous articleகாதலனுடன் சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி : காதலன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!
Next articleஇலங்கைக்கு வந்துள்ள மற்றுமொரு கப்பலில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள டீசல் !