மட்டக்களப்பில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட வயோதிப பெண்ணின் சடலம்!

மட்டக்களப்பில் கிணற்றில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு வெளிச்ச வீட்டு வீதி பாலமீன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய வள்ளித்தங்கம் கந்தசாமி என்ற வயோதிப பெண் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த வயோதிப பெண் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியடன் சடல்ததை மீட்ட பொலிஸார் உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇலங்கைக்கு வந்துள்ள மற்றுமொரு கப்பலில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள டீசல் !
Next articleகுளத்தில் விழுந்து மாயமான இளைஞர் : இரு இளைஞர்களை கைது செய்த பொலிஸார்!