மட்டக்களப்பில் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்றரை வயது சிறுமி பலி!

மட்டக்களப்பில் இயற்கை சீற்றம் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்றரை வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது இன்று மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணாணை பொத்தனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி குறித்த பகுதியில் வாழும் சனார் பாத்திமா றீமா என்ற மூன்றரை வயதுடைய சிறுமி என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி வீடு உடைக்கப்பட்ட வீட்டின் அறிகில் அதில் ஒருபக்க சுவர் மாத்திரம் இருந்த நிலையில் விளையாடிக்கொண்டிரிந்தனர்.

காற்று திடீரென பலமாக வீசியதில் அச்சுவர் இடிந்து விழுந்துள்ளது இதன்போது சிறுமியுடன் விளையான்ட இருவர் தப்பிச்சென்ற நிலையில் மூன்றரை வயது சிறுமி மீது சுவர் விழுந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் உயிரிழந்த சிறுமியின் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Previous articleகொராணா தொற்று அதிகரித்தால் பாடசாலை இயங்குமா ? பதிலளித்த கல்வி அமைச்சர் !
Next articleஇன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்!