வவுனியாவில் வாய்த்தர்க்கத்தால் இடம்பெற்ற பயங்கரம் : காதை கடித்து துப்பிய இளைஞர்!

வவுனியாவில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதால் இளைஞர் ஒருவர் மற்ற நபர்களில் ஒருவரின் காதை கடித்து துப்பியச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றிரவு 7.30 மணியளவில் வவுனியா வீரபுரம் சின்னத்தன்பனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதையடுத்து வாள்வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டது.
அதில் ஒரு இளைஞர் மோதலில் ஈடுபட்ட நபர் ஒருவரின் காதைகடித்து துண்டாக்கியுள்ளார்.

இதனையடுத்து தலையில் ஒருவருக்கு வாள்வெட்டி விழுந்ததில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கொடூரம்!
Next articleயாழில் பேராசையால் லட்சம் ரூபாய்களை இழந்த நபர் : வெளியான காரணம்!