யாழில் நாளை அரச உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் விசேட பெற்றோல் விநியோகம் !

யாழ்ப்பாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் 06-08-2022 சனிக்கிழமை விசேட பெற்றோல் விநியோகம்.யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மத்திய,மாகாண சபைகளின் அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் உள்ளடங்கலான அரச உத்தியோகத்தர்களுக்கும் ,ஓய்வூதியர்களுக்கும் 06-08-2022 ஆம் திகதி சனிக்கிழமை பெற்றோல் விநியோகத்தைச் செய்வதற்கு அரச அதிபர் க.மகேசன் விசேட ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

இது தொடர்பான சுற்றுநிரூபத்தை அனைத்துப் பிரதேச செயலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக 23 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக இந்த விநியோகம் நடைபெற உள்ளது.

QR கோட் அடிப்படையில் விநியோகம் நடைபெற உள்ளது. அரச உத்தியோகத்தர்கள் ,ஓய்வூதியர்கள் தமது உறுதிப்படுத்தலுக்காக தமது அடையாள அட்டையை அல்லது எரிபொருள் பங்கீட்டு அட்டையை எடுத்துச் செல்லுதல் அவசியமானதாகும்.

எந்தெந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் வழங்கப்படுமென்ற விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 01-08-2022 முதல் 05-08-2022 ஆம் திகதிகளுக்கிடையில் எரிபொருள் பெற்றவர்கள் இவ் விநியோகத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள்.

மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டும் பெற்றோல் வழங்கப்பட உள்ளதால் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தலா 1500 மோட்டார் சைக்கிள்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வரிசையை அமைக்கும் போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான வரிசையை அமைப்பது பொருத்தமானதாக இருக்கும்.

ஆகையால் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து நடைமுறையை மேற்கொள்ளுமாறும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கும் 06-08-2022 ஆம் திகதி சனிக்கிழமை பின்வரும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  1. கொக்குவில் AMT
  2. இருபாலை AMT
  3. திருமதி.க.லோகராணி தெல்லிப்பளை எரிபொருள் நிரப்பு நிலையம்.
  4. திரு. எஸ்.சுதர்சன் நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையம்
  5. புலோலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையம்
  6. வேலணை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலைய
Previous articleயாழில் மகளை கண்டித்த கணவரின் மண்டையை உடைத்த மனைவி!
Next articleயாழில் மாமியாரையும் மைத்துனரையும் கடுமையாக தாக்கிய மருமகன் : பின்னர் நடந்த அசம்பாவிதம்!