ஆர்ப்பாட்டக்காரர்களுடன் விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தரப்பினரை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

நாட்டிற்கு முன்னால் உள்ள பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு சகலவிதமான போராட்டக்காரர்களின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்வதாக நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சட்ட விரோதமாகவும், தன்னிச்சையாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பல போராட்டக்காரர்கள் போராட்ட இடத்தை விட்டு வெளியேறத் தயங்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Previous articleயாழ்.போதனா வைத்தியசாலையில் தங்கியிருக்கும் நோயாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!
Next articleதிடீரென இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 வயது இளைஞர் பலி!