யாழில் 52 சிலிண்டர்களை திருடிய கும்பல் : பொலிஸார் மடக்கிப்பிடிப்பு!

யாழில் 52 சிலிண்டர்களை திருடிய 6 பேர் கொண்ட கும்பளை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.ஓட்டுமடம் பகுதியில் உள்ள லாப்ஸ் சமையல் எரிவாயு களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 7 லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான 52 வெற்றுச் சிலிண்டர்கள் திருட்டுப் போயிருந்ததைத்தொடர்ந்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான

மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். யாழ்.பொம்மைவெளி மற்றும் நாவாந்துறை பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டடனர்.

சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட சிலிண்டர்களும் கைப்பற்றப்பட்டன.

Previous articleயாழில் எரிபொருளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ந மோட்டார் சைக்கிள் இன்ஜினுள் மண்ணை கொட்டிய விஷமிகள்!
Next articleயாழில் துவிச்சக்கரவண்டியை மோதித்தள்ளிய வாகனம் : சம்பவ இடத்தில் பலியான இளைஞர்!