யாழில் தனியார் கல்வி நிலையத்திற்குள் புகுந்த ஆட்டோ பின்னர் நடந்த அசம்பாவிதம்!

யாழில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தனியார் கல்வி நிறுவனத்தில் நுழைந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றுமுன்தினம் இரவு யாழ்.நெல்லியடி மாலுசந்தி பகுதியில் இடம்பெற்றள்ளது.

குறித்த பகுதியில் ஆட்டோவை மறுதிசைக்கு எடுத்துச்செல்லும் வேளையில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதன்போது அருகில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

சம்பவத்தின்போது கல்வி பயின்ற மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதநிலையில் ஆட்டோ கடுமையாக சேதமடைந்துள்ளது.

ஆனால் ஆட்டோவின் சாரதி பலத்த காயமுற்று வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

விபத்துத் தொடர்பான விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றர்.

Previous articleயாழில் தனிமையில் வாழ்ந்து வந்த பெண் சடலமாக மீட்பு : வெளியான காரணம்!
Next articleவீட்டினுள்ளையே இருங்கள் முன்னால் ஜனாதிபதியை எச்சரித்த தாய்லாந்து பொலிஸார்!