யாழில் வித்தியாசமாக பிறந்த கோழிக்குஞ்சு காண திரண்ட மக்கள்!

யாழில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சினை பார்க்க அதிகளவான மக்கள் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம்- அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் மகாராஜா கௌரி என்ற குடும்பப் பெண் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு அதிலிருந்து வருமானம் ஈட்டுவருகின்றார்.

மேலும் இவரது வீட்டில் நேற்றையதினம் ஆறு கோழி குஞ்சுகள் பொரிந்துள்ள நிலையில் அதில் ஒரு கோழி குஞ்சு நான்கு காலுடன் பொரிந்துள்ளது.

இது அப்பகுிதியில் அதிசயமாய் பார்க்கப்படுவதும் குறித்த கோழி குஞ்சு மத்த குஞ்சுகளை போலவே சுறுசுறுப்பாக காணப்பட்டுள்ளது.

இதனை அப்பகுதியில் ஏனையளவான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

Previous articleவீட்டினுள்ளையே இருங்கள் முன்னால் ஜனாதிபதியை எச்சரித்த தாய்லாந்து பொலிஸார்!
Next articleயாழ். நாவற்குழியை சேர்ந்த நபர் வெளிநாட்டில் பலி : வெளியான காரணம்!