யாழில் சாரதிப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆட்டோவை மொதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்!

யாழில் சாரதிப் பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த ஆட்டோவின் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்றையதினம் காலை யாழ்.மண்டைதீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் சாரதிப்பயிற்சியை ஒரு ஆட்டோ வழங்கி கொண்டிருந்து இதன்போது கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோவின் மீது மோதியுள்ளது.

இதனால் சாரதிப் பயிற்சியாளர் உட்பட 03 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் காயமடைந்த ஏணையோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Previous articleயாழ். நாவற்குழியை சேர்ந்த நபர் வெளிநாட்டில் பலி : வெளியான காரணம்!
Next articleயாழில் ஊசி மூலம் போதைமருத்து செலுத்திய பூசகர் பலி!