யாழில் தூக்க கலக்கத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த ராணுவ சிப்பாய்!

யாழில் தூக்க கலக்கத்தில் ராணுவ சிப்பாய் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்ததால் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ்ப்பாணம் கடுகதி புகையிரதத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தவறி விழுந்த சிப்பாய் யாழில் பணிபுரியும் எஸ். விஜயசிங்க (வயது 26) என தெரியவந்துள்ளது.

குறித்த சிப்பாய் கொழும்பிலிருந்து பணிக்காக யாழ்ப்பான கடுகதி புகையிரதத்திற்கு வந்துள்ளார்.

இதன்போது ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட வேளை குறித்த சிப்பாய் தூக்க கலக்கத்தில் நிலை தடுமாறி விழுந்துள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

Previous articleமதுபோதையில் 08 வயது சிறுவனை துாக்கி கால்வாயில் வீசிய கிராம சேவகர் கைது!
Next articleயாழில் சிகிச்சை பெற்று வந்த பெண் கொராணா தொற்றாளர் பலி!