கணவரின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி : வெளியான காரணம்!

கணவரின் மீது எழுந்த சந்தேகத்தினால் மனைவி ஒருவர் கணவரின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றியுள்ளதையடுத்து கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது தமிழகத்தில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமம் திடீர் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வசித்துவரும் கணவரான தங்கராஜ் (32) சென்னையில் உள்ள தனியார் கம்பனியில் சூப்பரவைசராக பணிப்புரிந்து வருகிறார்.

இவரது மனைவி பிரியா-27 என்ற‌ மனைவி மற்றும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

இந்நிலையில் கணவர் வேலை செய்யும் இடத்தில் ஒருபெண்ணுடன் தகாத உறவில் உள்ளார் மனைவி கிடைத்த தகவலினையடுத்து இருவருக்கும் இடையில் தினமுத் சண்டை ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளது.

இதனையடுத்து வாக்குவாதம் முற்றிப்போன நிலையில் நேற்று இரவு கணவர் தூங்கும் வேளையில் மனைவி கொதிக்கும் வெந்நீரை அவரது அந்தரங்க உறுப்பில் ஊற்றியுள்ளார்.

இதனால் துடிதுடித்த கணவரை அக்கம்பக்கத்தினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நடத்திய விசாரணையில் கணவன் மீது உள்ள சந்தேகத்திலேயே இச்செயலை செய்தேன் என பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டார்.

மேலும் குறித்த நபர் தற்போது வேலூர் பகுதியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழ்.இந்துக் கல்லுாரியில் ஹந்தி மொழி வகுப்புக்கள் ஆரம்பம்!
Next articleபொலிஸாரை கண்டதும் பயத்தில் குளத்தில் குதித்த இளைஞர் பலி!