பிரேக் பிடிக்காமல் சுவரில் மோதிய சைக்கிள் : 13 வயது மாணவன் பலி!

பிரேக் பிடிக்காமல் சைக்கிள் ஒன்று சுவரில் மோதியதில் அதில் பயணித்த 13 வயது மாணவர் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மற்றொரு மாணவர் பலத்த காயயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ள்ளனர்.

இச்சம்பவமானது திக்வெல்ல பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் சைக்கிள் பிரேக் பிடிக்காமல் அருகில் இருந்த சுவரில் மோதி விபத்தினை ஏறபடுத்தியுள்ளது.

இதனையடுத்து அதில் பயணித்த மாணவரில் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றொருவர் முன்னால் இருந்து பயணித்தன் காரணமாக உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் நடத்திய விசாரணையில் சைக்கிளில் பிரேக் பழுதான காரணத்திகனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

Previous articleபொலிஸாரை கண்டதும் பயத்தில் குளத்தில் குதித்த இளைஞர் பலி!
Next articleவவுனியாவில் விபச்சார விடுதி பொலிஸாரினால் முற்றுகை : பெண்கள் உட்பட இரண்டு ஆண்கள் கைது!