வவுனியாவில் விபச்சார விடுதி பொலிஸாரினால் முற்றுகை : பெண்கள் உட்பட இரண்டு ஆண்கள் கைது!

வவுனியாவில் இயங்கி வந்த விபச்சார விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனை நடத்தியதில் இரு பெண்கள் மற்றும் இரு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவமானது இன்று வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதி தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமைய பொலிஸார் அப்பகுதியை முற்றுகையிட்டதையடுத்து இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் முற்றுகையிட்ட வீட்டில் ரி56 ரக 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலினையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்,மற்றும் மது ஒழிப்பு பிரிவு பொலிசார் மோப்ப நாயின் உதவியுடன் குறித்த பகுதியில் முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அவ் விடுதியில் பொலிஸார் சுற்றி வழைத்தால் விடுதியில் தப்பிச்செல்லும் மாற்றுப்பாதை ஒன்றையும் அவர்கள் அமைத்திருந்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஒய்வுபெற்ற இராணுவ வீரர் என்பதும் அவ்விடுதி அந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் விடுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரேக் பிடிக்காமல் சுவரில் மோதிய சைக்கிள் : 13 வயது மாணவன் பலி!
Next articleகடல் வாழ் உயிரினங்களுக்கும் கொராணா பரிசோதனை மேற்கொள்ளும் முக்கிய நாடு!