கடல் வாழ் உயிரினங்களுக்கும் கொராணா பரிசோதனை மேற்கொள்ளும் முக்கிய நாடு!

கொராணாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் கொராணா வந்துவிடக்கூடாது என மீன் நண்டு ஆகியவற்றிற்கு கொராணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சுமார் மூன்று வருடங்களாக கொராணா உலகையே ஆட்டிவைத்த நிலையில் பல நாடுகள் கொஞ்சம் கொஞசமாக தற்சம்யம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.

இந்நிலையில் மீண்டும் அவ்வாறு நடக்க கூடாது எனும் எண்ணத்தில் இச்செயல்முறையை மேற்கொண்டு வருகின்றது.

இதனைத்தொடர்ந்து அந்நாட்டில் கொராணா தொற்று குறைவாகி தற்சமயம் கூடி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சீனாவில் நாள் ஒன்றுக்கு 50லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொராணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

பொதுமக்களை தொடர்ந்து கடல்வாழ் உயிரினங்கள் முதல் இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதில் ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடையும் (PPE கிட்) அணிந்துள்ளனர். மீனின் வாய் பகுதி மற்றும் நண்டின் ஓட்டிலும் PCR பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleவவுனியாவில் விபச்சார விடுதி பொலிஸாரினால் முற்றுகை : பெண்கள் உட்பட இரண்டு ஆண்கள் கைது!
Next articleபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை மறுத்த கியூபெக் கார்டினல் மார்க் ஓலெட் !