யாழில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் விபத்து : இளைஞர் ஒருவர் பலி!

யாழில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளி பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனமானது அதிவேகத்தில் பயணித்ததால் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதகைனயடுத்து அதில் பயணித்த இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleயாழில் காணமல் போன முதியவர் சடலமாக மீட்பு : வெளியான காரணம்!
Next articleயாழில் நல்லூர் ஆலயத்தினை மது போதையில் துப்பரவில் ஈடுபட்ட சுகாதார ஊழியரை தட்டிக்கேட்ட அதிகாரியை தாக்குதல் முயற்சி!