யாழில் நல்லூர் ஆலயத்தினை மது போதையில் துப்பரவில் ஈடுபட்ட சுகாதார ஊழியரை தட்டிக்கேட்ட அதிகாரியை தாக்குதல் முயற்சி!

யாழில் மதுபோதையில் நின்று துப்பரவு பணியை மேற்கொண்ட சுகாதார ஊழியரை தட்டிக்கேட்ட யாழ்.மாநகரசபை உறுப்பினர் மீதும், மேற்பார்வையாளர் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டைதையடுத்து பணயாளரை பணி நீக்கம செய்யம் முடிவு எடுத்துள்ளதாக யாழ்.மாநகரசபை தெரிவித்துள்ளது.

இச்சம்பவமானது நல்லூர் ஆலய உற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று(20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

நல்லூர் கோவிலில் அதிகாலை துப்பரவு பணியில் ஈடுபட்ட ஊழியர் மதுபோதையில் நிற்பதை யாழ். மாநகர சபை உறுப்பினர் அவதானத்தார்.

பின்பு குறித்த நபரை நாளை பணியில் ஈடுபடுமாறும் இன்று வீட்டுக்கு அனுப்புமாறும் மேற்பார்வையாளருக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து மேற்பார்வையாளர் துப்பரவு பணியில் மது போதையில் ஈடுபட வேண்டாம் என கூறியபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஊழியர் மேற்பார்வையினர் மீதும் மாநகர சபை உறுப்பினர் மீதும் அச்சுறுத்தும் தாக்குதல் முயற்சியிலும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இ தனையடுத்து குறித்த துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள யாழ் மாநகர சபை குறித்த பணியாளரை பணியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.