மீண்டும் நாட்டிற்கு வருகிறார் கோட்டாபய ராஜபக்ச : பலத்த பாதுகாப்பில் அவரது வீடு!

முன்னாள் ஜனாதிபதி பல்வேறு எதிர்ப்பினால் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற நிலையில் தற்போது நாட்டிந்கு திரும்பபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து மிரிஹான பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவர் எதிர்வரும் 24ம் திகதி இலங்கைக்கு வருகின்ற நிலையில் அவரது வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது வரருகை திகதி அடுத்த மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டது எனவும் சில தபவல்கள் வெள்யாகியுள்ள நிலையில் உள்ளது.

அதன்படி அவர் நாட்டுக்கு வருகைதரும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பினை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் நல்லூர் ஆலயத்தினை மது போதையில் துப்பரவில் ஈடுபட்ட சுகாதார ஊழியரை தட்டிக்கேட்ட அதிகாரியை தாக்குதல் முயற்சி!
Next articleமன்னாரில் லஞ்சம் வாங்கியதாக பெண் கொடுத்த பொய் குற்றச்சாட்டில் கிராமசேவகர் கைது : அப்பெண்ணின் வீட்டை அடித்து நொருக்கிய பொதுமக்கள்!