நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சித்திரத்தேர் வெள்ளோட்டம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய புனரமைக்கப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணி முதல் நடைபெறவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் புரவலர்களான மாப்பன முதலியாரின் வழிவந்த மூன்றாம் இரகுநாத மாப்பண முதலியார் காலத்தில் கோயிலுக்கான முதல் தேர் கட்டப்பட்டது.

அதன்பின் இரண்டாம் ஆறுமுக மாப்பண முதலியார் அழகன் முருகனுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி சிம்மாசனம் செய்து அழகன் முருகனுக்கு அழகு செய்தார்.

அவர் காலத்தில் சண்முகப் பெருமான் ஸ்தாபிக்கப்பட்டு, சண்முகரே தேரில் ஏறி பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார்.

நல்லூரில் பாவனையில் இருந்த தேர் உடைந்த நிலையில் இருந்ததால், அதன் ஆபத்தை உணர்ந்த சண்முகதாஸ் மாப்பாண முதலியார், 1964ல் புதிய தேர் ஒன்றை இயக்கி, வடம் பிடித்து இழுத்து, ஐராதத்ஸவத்தை இன்னும் அழகாக்கினார்.

தற்போது தேர் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் புதன்கிழமை வெள்ளோட்டம் நடைபெறவுள்ளது.