முட்டையின் விலை நிர்ணயம் ஒரு ஏமாத்து வேலை! : அதிக விலைக்கு விற்கப்படும் முட்டை!

முட்டை விலை நிர்ணயம் என்பது ஏமாற்று வேலை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முட்டையின் விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானியை நுகர்வோர் அதிகாரசபை நேற்றிரவு 19ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

வெள்ளை முட்டை ஒன்றின் விலை 43 ரூபாவாகவும், சிவப்பு நிற முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும்,

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 60 ரூபா முதல் 65 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த நாட்டில் எந்த ஒரு வர்த்தகரும் பொது மக்களின் நலன் கருதி வெளியிடப்பட்ட எந்த சட்டத்தையும் அல்லது அறிவுறுத்தலையும் பின்பற்றுவதில்லை

இதற்கு நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகளோ அல்லது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை

பொது மக்கள் கவலையில் உள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விலையை அரசாங்கம் உயர்த்தும் போது,

விலை குறையும் போது வியாபாரிகள் விலையை குறைக்காமல் விலையை உயர்த்தி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொருளாதார மந்தநிலையால் நாட்டு மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், வணிகர் சமூகம் சாமானியர்களிடம் இருந்து விலகி உள்ளது

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிவது போல் செயற்படுவது மிகவும் மோசமான நிலை எனவும் பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.