வவுனியாவில் கொவிட் தொற்று அதிகரிப்பு: சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

வவுனியாவில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதுடன், கோவிட் இறப்புகளும் பதிவாகி வருகின்றன. தற்போது பலர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, கோவிட் தொற்று தீவிர நிலையை அடைவதைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் Pizer கோவிட் தடுப்பூசிகள் மீண்டும் ஏற்றப்படுகின்றன.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 43 வீதமானவர்களும், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 வீதமான மக்களும், வவுனியா வடக்கில் 35 வீதமான மக்களும் 3வது கொவிட் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மேலும், 4வது தடுப்பூசி (Pizer) வெளிநாடு செல்பவர்களுக்கு மட்டும் குறைந்த அளவிலேயே போடப்பட்டுள்ளது.

எனவே, தடுப்பூசிகளை முறையாகப் பெறாதவர்கள், கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.