குளவி கொட்டுக்கு இலக்கான கர்ப்பிணிகள் உட்பட நான்கு பெண்கள்!

தேயிலை பறித்துக் கொண்டிருந்த நான்கு பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (23) பகலில் இடம்பெற்றுள்ளதுடன் கர்ப்பிணிப் பெண்ணும் இதில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலா – பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த 4 பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதேவேளை, கர்ப்பிணிப் பெண்ணுக்கு குளவிகள் அதிகம் கொட்டியதால், அவர் பொகவந்தலா வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleகனவில் ஆடு அறுப்பதாக நினைத்து ஆணுறுப்பை வெட்டிய நபர்!
Next articleஇலங்கையில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் : வெளியான தகவல்!