நாளைய தினம் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் நாளை (24) மூன்று மணி நேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய மண்டலங்களுக்கு பகல் நேரத்தில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் இரவு நேரத்தில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதேபோல், சிசி மண்டலங்களுக்கு காலை 6 மணி முதல் 8.30 மணி வரை இரண்டரை மணி நேரம் மின்வெட்டு அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், எம், என், ஓ, எக்ஸ், ஒய், இசட் ஆகிய வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Previous articleசபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இரண்டு நாட்களில் 10 இலட்சம் லீற்றர் மண்ணெண்ணெய் உற்பத்தி!
Next articleயாழ் ராணி ரயிலில் பயணச்சீட்டு கிடைக்காமல் பயணித்த சிலர் பிடிபட்டனர், ஆய்வாளர்கள் வருவதை அறிந்து சிலர் தப்பியோடினர்!